மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 20 ஆயிரம் ரூபா வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பெருந்தோட்ட கம்பனிகளிடம், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி ராதாகிருஸ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
” நாட்டில் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. மக்களுக்கு தங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. எனவே மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இருபதாயிரம் ரூபா வழங்க வேண்டுமென கம்பனிகளுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளேன். ” – எனவும் அவர் கூறினார்.
நிருபர் – நீலமேகம் பிரசாந்த்
