துப்பாக்கியுடன் இருவர் கைது!

இலங்கையில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரக துப்பாக்கியுடன் இரண்டு சந்தேகநபர்கள் விசேட பொலிஸ் குழுவினால் நேற்று (5) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கியை வைத்திருந்ததாக கூறப்படும் மஹியங்கனானை, இல. 40 இன்டஸ்ட்ரியல் கொலனியில் வசிக்கும் 61 வயதுடைய நபரும், துப்பாக்கியை தயாரித்ததாக கூறப்படும் பதியத்தலாவ பகுதியை சேர்ந்த 39 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய அவரின் அறிவுறுத்தலின் மஹியங்கனை பகுதியில் உள்ள முதலாவது சந்தேக நபரின் வீட்டை சோதனையிட்ட விசேட பொலிஸ் குழுவினர், வீட்டை அண்டிய கரச் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த துப்பாக்கியை கண்டுபிடித்துள்ளனர்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​பதியத்தலாவ பிரதேசத்தில் துப்பாக்கி தயாரிக்கும் நபரிடம் இருந்து இந்த துப்பாக்கி பெறப்பட்டதாகவும், அதன் பிரகாரம், சில மணித்தியாலங்களின் பின்னர், குறித்த சந்தேக நபரையும் பொலிஸ் குழு கைதுசெய்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​தான் சில காலமாக வேட்டையாடும் துப்பாக்கிகள், போன்ற துப்பாக்கிகளை தயாரித்து வருவதாகவும், யூடியூப் சேனலில் காணொளியை பார்த்து தான் இந்த துப்பாக்கியை தயாரித்ததாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

பதுளை மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்லவின் பணிப்புரைக்கமைய பொலிஸ் பரிசோதகர் சுதேஷ் சதுரங்க, பொலிஸ் கிராதுருகோட்டா உள்ளிட்ட குழுவினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதன்படி, மஹியங்கனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.டபிள்யூ.எம் விஜேரத்ன தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன், சந்தேகநபர்கள் இருவரும் மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் ஆஜர் தெரிவித்தனர்

 

ராமு தனராஜா

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles