துப்பாக்கி வெடித்ததில் 16 வயதுடைய சிறுவன் உயிரிழப்பு

துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் 16 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

அம்பன்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலேயே நேற்று இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பன்வெல கெத்பஹூவ பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தையடுத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய சிறுவன் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வயல்வெளியிலிருக்கும் குடிசையில் தனித்திருக்கும் போது குறித்த சிறுவன் துப்பாக்கியைக் கையாண்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதையடுத்து வயலில் அன்றாட வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்த சிறுவனின் பெற்றோர் குடிசைக்கு விரைந்து வந்து பார்த்த போது சிறுவன் காயமடைந்து கிடந்துள்ளான்.

சம்பவம் தொடர்பில் அம்பன்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Latest Articles