துல்கர் சல்மான் புதிய படத்தின் டீசர் வெளியீடு!

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் லக்கி பாஸ்கர் என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடிக்கிறார்.

சித்தாரா எண்டர்டெயின்மென்ட் மற்றும் பார்ச்சூன் 24 ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

பிப்ரவரி 3-ம் தேதி வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்தது.

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘வாத்தி’ திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து வெற்றி படமாக அமைந்தது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தை அவர் இயக்கியுள்ளார்.

அதே சமயம், சீதா ராமம் படத்தின் வெற்றியை தொடர்ந்து துல்கர் சல்மான் நடிக்கும் இரண்டாவது தெலுங்கு படம் \”லக்கி பாஸ்கர்\” என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

பாஸ்கர் என்ற கதாப்பாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். சாதாரண மிடில் கிளால் மேனாக, ஒரு வங்கி ஊழியராக இருப்பவர் திடீரென்று அவருக்கு ஒரு மிகப் பெரிய பணத்தொகை கிடைக்கிறது இவ்வாறு டீசரின் காட்சிகள் மிக விறுவிறுப்பாக இடம்பெற்றுள்ளன.

இந்தாண்டு ஜூலையில் லக்கி பாஸ்கர் திரைப்படம் வெளியாகவுள்ளது.

Related Articles

Latest Articles