கொவிட்-19 காரணமாக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் நாடு முடக்கப்பட்டதை அடுத்து, எயார்டெல் லங்கா தமது ஊழியர்களது செயற்திறன், கற்றல் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை இரண்டு மடங்காக்கியுள்ளதுடன் அதன் பெறுபேறுகளை தற்போது அனுபவித்து வருகின்றது.
‘தற்போதுள்ள தொற்றுநோயுடன், ஒரு காலத்தில் நேருக்கு நேர் சந்திக்க ஊக்கப்படுத்தப்பட்ட பணியிட கலாசாரம் தற்போது மாற்றடைந்துள்ளது. இவ்வாறான இடையூறானது கற்றல் மற்றும் வளர்ச்சியின் தொடர்ச்சிக்கு ஒரு புதிய சவாலை முன்வைத்தது. பல நிறுவனங்கள் வௌ;வேறு வடிவங்களில் செலவுக் குறைப்பை செய்திருந்தாலும், முன்பைவிட கற்றல் மிக முக்கியமானது என நாம் அறிந்து கொண்டோம். நிறுவனம் மற்றும் தனிநபர்கள் மேலும் தாக்குப்பிடிக்கக்கூடிய, நிலைமைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளக்கூடிய மற்றும் புத்தாக்கத்தை ஏற்றுக்கொள்ள வழி அமைத்தோம்’ என எயார்டெல் முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷிஸ் சந்திரா குறிப்பிட்டார்.
கடந்த இரண்டு காலாண்டுகளாக நிறுவனத்தில் பணியாற்றுபவர்களில் 85% இற்கும் அதிகமானோருக்கு டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன. பட்டப்படிப்பின் பின்னரான முகாமைத்துவ நிறுவனத்துடன் இணைந்து எயார்டெல் நிறைவேற்று அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம் முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு வணிக பாடசாலை ஊடாக விற்பனை தலைமைத்துவ அபிவிருத்தி செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதுவதிர இன்னும் பல பயிற்சி திட்டங்கள் முன்கள ஊழியர் படையணியை இலக்கு வைத்து நடத்தப்பட்டன.
கோர்செராவின் ஈ- லேர்னிங் மற்றும் எயார்டெல்லின் ஐ-லேர்னிங் நிகழ்ச்சிகளில் கல்வி கற்பதற்கு ஊழியர்கள் ஊக்குவிக்கப்பட்டனர், அதன்மூலம் அவர்களது தொழில்சார் அறிவு மேம்படும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. இந்த திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றிய அனைத்து ஊழியர்களுக்கும் ஈ-லேர்னிங் சாம்பியன்ஷிப் வழங்கப்பட்டது. அதற்கு மேலதிகமாக 4G திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் பங்கேற்றனர், அத்துடன் முழுநாட்டிற்கும் 4G LTE சேவைகளை வழங்குவதற்கான முன்னோடியாக ஊழியர்களுக்கு அந்த பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
‘ வலுவான மற்றும் பன்முகப்பட்ட குழுக்களை உருவாக்குவது எமது தலைமைச் செயற்பாடுகளில் மிக முக்கியமானது. எமது ஊழியர்கள் அனைவரும் தொலைதூரத்தில் இருந்தாலும் அவர்களுக்கு தமது பணிகளை செய்வதற்கான திறன்கள் இருக்க வேண்டும் என்பதே இதன் பொருளாகும். ஆகவே தான் எமது மனிதவள செயல்பாட்டின் அனைத்து அம்சங்களையும் டிஜிட்டல் மயப்படுத்துகின்றோம். இது உற்சாகமூட்டும் பயிற்சிகள், நிர்வாகப் பயிற்சி மற்றும் ஆட்சேர்ப்பு போன்ற எளிமையான விடயங்களை குறிக்கின்றது. இவை அனைத்தும் தொலைதூர வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்தப்பட்டன’ என எயார்டெல் லங்கா மனித வள பிரிவின் தலைவர் கனிஷ்க ரணவீர தெரிவித்தார்.
கடந்த இரண்டு காலாண்டுகளில் எயார்டெல் நிறுவனம் முன்னெடுத்த ஊழியர் இணைப்பு, மனித வள செயற்பாடுகளை டிஜிட்டல்மயப்படுத்தியமை ஊடாக தொடர்ச்சியாக சேவையை முன்னெடுத்து செல்வதற்கான சாட்சியாகும். இதுதவிர எயார்டெல் மனித வள டிஜிட்டல் செயற்பாட்டிற்குள் உள்நுழைந்ததுடன் ‘Airtel Tech Talk’ போன்ற துறையிள் பிரபலங்களுடன் நிறுவனத்திலுள்ள பிரபயல்மானவர்கள் தமது அறிவை பகிர்ந்து கொள்வதற்கு இதனை மேடையாக பயன்படுத்தினர்.