‘தெங் செபத’? மஹிந்தவின் பாணியிலேயே அரசை விளாசும் தேரர்! (Video)

” தெங் செபத   ஆமதுருவனே” – என்று அரசாங்கத்துக்கு வாக்களித்த மக்கள் தன்னிடம் கேள்வி எழுப்புகின்றனர் என அபயராம விவகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு பெரும்பாடு பட்ட தேரர்களில் பிரதானமானவர்தான் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்.

எனினும், அவர் தற்போது அரசாங்கத்தின் செயற்பாடுகளையும், பயணத்தையும் கடுமையாக விமர்சித்துவருகின்றார்.

” நாட்டுக்கு சேவை செய்யக்கூடிய அரசாங்கத்தையே நாம் எதிர்ப்பார்த்தோம். ஆனால் இந்த அரசாங்கம் திசைமாறிபயணிக்கின்றது.  இது நாம் கொண்டுவந்த அரசாங்கம் அல்ல. இதே வழியில் அரசாங்கம் பயணித்தால் நாடு மிஞ்சுமா என தெரியவில்லை.” -என்றும் தேரர் விமர்சித்தார்.

Related Articles

Latest Articles