தென்னாபிரிக்காவிடம் ஒரு ஓட்டத்தால் தோற்றது நேபாளம்

2024 T20 உலகக்கிண்ணப் போட்டித் தொடரில் தென்னாபிரிக்கா மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையிலான போட்டியில் தென்னாபிரிக்கா அணி ஒரு ஓட்டத்தால் வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற நேபாளம் அணி முதலில் துடுப்பெடுத்தாட தென்னாபிரிக்கா அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 115 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அதன்படி, வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நேபாளம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 114 ஓட்டங்களை பெற்று ஒரு ஓட்டத்தால் வெற்றியை நழுவ விட்டது.

இந்த வெற்றியை தொடர்ந்து முதல் சுற்றில் கலந்து கொண்ட நான்கு போட்டிகளிலும் வெற்றிப் பெற்று தென்னாபிரிக்கா அணி 8 புள்ளிகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Latest Articles