தென் மாகாண பாடசாலைகளின் பரீட்சை ஒத்திவைப்பு

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தென் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளின் இரண்டாம் தவணைப் பரீட்சை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் குழு கூட்டத்தில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

அத்துடன், குறித்த பாடசாலைகளுக்கான பரீட்சை திகதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தென் மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles