தெமட்டகொட சுகாதார பிரிவில் மேலும் 26 பேருக்கு வைரஸ் தொற்று!

தெமட்டகொட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 24 மணிநேரத்துக்குள் மேலும் 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு , தெமட்டகொட பகுதியில் அதிக வீரியம் கொண்ட கொரோனா (டெல்டா) திரிபு தொற்றிய ஐவர் ஆரம்பத்தில் அடையாளம் காணப்பட்டிருந்தனர். அதன்பின்னர் மேலும் சிலருக்கு அவ்வைரஸ் தொற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்துக்குள் 411 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

Related Articles

Latest Articles