பதுளை – பண்டாரவளை பிரதான வீதியில் தெமோதர உடுவர பகுதியில் இன்று காலை (20/10) இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.
இரு ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்த பெண்கள் இருவரும் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் ஹாலி எல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நடராஜா மலர்வேந்தன்