‘தெருவில் இறங்கினார் திலகர் – ஓயமாட்டார் எனவும் சூளுரை’

” நுவரெலியா மாவட்டத்தில் மேலதிகமாக ஐந்து பிரதேச செயலகங்கள் நிறுவப்பட வேண்டும் என்ற அமைச்சரவை தீர்மானம் நடைமுறைப்படுத்தாமல், நிறுத்தப்பட்டுள்ளமையானது உச்சபட்ச பாரபட்சமாகும். எனவே, புதிதாக ஐந்து பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட வேண்டும். அந்த இலக்கை அடையும் வரை நாம் ஓயமாட்டோம்.” – என்று மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் சூளுரைத்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக ஐந்து பிரதேச செயலகங்களை அமைக்குமாறு, சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், நுவரெலியா மாவட்டம் முழுவதும் கையொப்பம் திரட்டும் பணி கடந்த 25 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படுகின்றது. இதற்கு நுவரெலியா மாவட்டத்துக்கு வெளியில் இருந்தும் பல தரப்பினரும் ஆதரவையும், தமது ஒருமைப்பாட்டையும் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் ஹட்டன் நகரிலும் இன்று (27.01.2022) கையொப்பம் திரட்டப்பட்டது. இதன்போது ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கமைப்பாளரான எம். திலகராஜ் கூறியவை வருமாறு,

” சனத்தொகைக்கு ஏற்பட அல்லாது, அநீதியான முறையிலேயே நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் சுமார் 3 தசாப்தங்களாக சமூகத்தில் கருத்தாடல்கள் இடம்பெற்றுவந்தன. எனினும், இது தொடர்பில் 2016 ஒக்டோபரில் என்னால் நாடாளுமன்றத்தில் பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டது. அந்த பிரேரணைமீதான விவாதத்தின்போது பதிலளித்து உரையாற்றிய அப்போதைய துறைசார் அமைச்சர் வஜீர அபேவர்தன, நுவரெலியா மாவட்டத்தில் 5 ஆக உள்ள பிரதேச செயலகங்களின் எண்ணிக்கையை 10 ஆக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை 2018 ஆம் ஆண்டு அவர் முன்வைத்தார். அமைச்சரவை அனுமதியின் பின்னர் புதிய பிரதேச செயலகங்கள் தொடர்பில் 2019 இல் வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டது. அந்த வர்த்தமானி அறிவித்தலில் நுவரெலியாவில் புதிதாக ஐந்து பிரதேச செயலகங்களும், காலியில் 3 பிரதேச செயலகங்களும் நிறுவப்பட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இதன்படி காலி மாவட்டத்தில் மூன்று பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால்நுவரெலியா மாவட்டத்துக்கான பிரதேச செயலகங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதற்கு பதிலாக இரண்டு உப செயலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது நுவரெலியா மாவட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதியாகும்.

எனவேதான் எமக்கு பிரதேச செயலகங்களே வேண்டும் என வலியுறுத்தும் கையெழுத்து இயக்கத்தை நாம் ஆரம்பித்துள்ளோம். மூன்று நாட்கள் கையொப்பங்கள் திரட்டப்பட்டன. மாவட்டம் கடந்த ஆதரவும் எமக்கு கிட்டியது. அந்தவகையில் நாளை தினம் (28) நுவரெலியா

மாவட்ட செயலாளரிடம் ,கையெழுத்து திரட்டப்பட்ட ஆவணம் கையளிக்கப்படும். ஜனாதிபதி,

பிரதமர் உட்பட அரசின் கவனம் அதன்மூலம் ஈர்க்கப்படும். புதிதாக ஐந்து பிரதேச செயலகங்களை உருவாக்கிக்கொள்ளும்வரை நாம் ஓயப்போவதில்லை.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles