தெற்கு அரசியலில் பரபரப்பு! மீண்டும் களமிறங்குகிறார் சந்திரிக்கா?

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்புவதற்காக அக்கட்சியுடன் இணைந்து ‘தற்காலிக அரசியல்’ பயணத்தை முன்னெடுக்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தீர்மானித்துள்ளார் என அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்களும், ஆதரவாளர்களும் விடுத்தகோரிக்கையின் பிரகாரமே சந்திரிக்கா அம்மையார் இந்த முடிவை எடுத்துள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், இது தொடர்பில் சந்திரிக்கா அம்மையார் தரப்பில் இருந்து இன்னும் உறுதிப்படுத்தல் இடம்பெறவில்லை.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் பரந்தப்பட்ட அரசியல் கூட்டணியை அமைப்பதற்காக சந்திரிக்கா அம்மையார் பங்களிப்பு வழங்க முன்வந்தாலும், அவர் செயற்பாட்டு அரசியலில் இறங்கமாட்டார் என சந்திரிக்காவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Articles

Latest Articles