தெல்தோட்டையில் மர வெண்டைக்காய் வளர்ப்பு

கண்டி, தெல்தோட்டையில் கலாநிதி கே.பிரபாகரன் என்பரின் வீட்டுத் தோட்டத்தில் பயிரிடப்பட்ட மரவெண்டிக்காய் மூலம் வெற்றிகரமாக விளைச்சல் பெறப்படுகின்றது.

வெண்டிக்காய் என்றும் வெண்டைக்காய் என்றும் அழைக்கப்படும் இந்த மரவெண்டி செய்கை தொடர்பாக செய்கையாளரிடம் வினவியபோது,

” நண்பர் ஒருவர் ஊடாக கிடைக்கபெற்ற விதையின் மூலம் உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டது, தற்போது இதன் விளைச்சல் அதிகரித்துள்ளது. மாதம் ஒன்றுக்கு ஒரு மரத்தில் இருந்து நான்கு தொடக்கம் 05 கிலோ வரையிலான வெண்டிக்காய் பெறப்படுகின்றது. சமைக்கப்படும் கறியானது மிகவும் சுவையாகவும் சத்துள்ளதாக இருக்கின்றது.” – என்று கூறினார்.

வெண்டையின் அறிவியல் பெயர் “எபில்மொஸ்கஸ் எஸ்குலென்டஸ்” செம்பருத்தி தாவர குடும்பத்தை சேர்ந்த வெண்டை ஆபிரிக்காவை பூர்வீகமாக கொண்டது என நம்படுகின்றது.

வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை வளரும் என்று கூறுவர் ஆனால் வெண்டைக்காய்க்கும் அறிவு வளர்ச்சிக்கும் நேரடியான தொடர்பு இருக்கிறதோ இல்லையோ, சர்க்கரை ,அனீமியா ,ஆஸ்துமா கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய் , நீரிழிவு வயிற்றுப் புண், பார்வைக் குறைபாடு என சகல நோய்களையும் தீர்க்கும் சர்வரோக நிவாரணி என்பதில் சந்தேகம் வேண்டாம்.

என்ன இருக்கிறது? (100 கிராமில்) ஆற்றல் 33 கிலோ கலோரி கார்போஹைட்ரேட் 7.45 கிராம் கொழுப்பு 0.19 கிராம் புரதம் 2 கிராம்வைட்டமின் ஏ 36 மியூஜி வைட்டமின் சி 23 மி.கி. வைட்டமின் இ 0.27 மி.கி. வைட்டமின் கே 31.3 மியூஜி கால்சியம் 82 மி.கி. இரும்பு 0.62 மி.கி.

ஆங்கிலத்தில் ‘லேடிஸ் ஃபிங்கர்ஸ்’ என அழைக்கப்படுகிறது வெண்டைக்காய். கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசிய மான ஃபோலிக் அமிலம் வெண்டைக்காயில் நிறையவே உள்ளது. கர்ப்பத்தில் உள்ள குழந்தையானது உள்ளே நல்லபடியாக வளரவும் முதல் ட்ரைமெஸ்டரின் போதான குழந்தையின் நரம்புக் குழாய்களின் வளர்ச்சிக்கும் இந்த ஃபோலிக் அமிலமானது மிகவும் அவசியம்.

வெண்டைக்காயின் சிறப்பே அதன் கொழகொழப்புத் தன்மைதான். ஆனால், அந்தக் கொழகொழப்பு பிடிக்காமலே பலரும் அதை சேர்த்துக் கொள்வதில்லை. உண்மையில் அந்த வழவழப்புத் தன்மையில்தான் வெண்டைக்காயின் அத்தனை மருத்துவப் பலன்களும் மறைந்துள்ளன. இந்த வழவழப்பில் உள்ள நார்ச்சத்து அல்சர் பாதித்தவர்களுக்கு அருமருந்து. தவிர, மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட வயிற்று உபாதைகள் அனைத்தையும் குணப்படுத்தக் கூடியது.

நமது நிருபர் – பா.திருஞானம்

Related Articles

Latest Articles