தெல்தோட்டையில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று

கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை தோட்டத்தில் மேலும் நால்வருக்கு இன்று (12) கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆண்கள் இருவருக்கும், பெண்கள் இருவருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் மூவர் 25 வயதுக்கும் குறைந்தவர்கள்.

கண்டியில் பணிபுரியும் பெண்ணொருவர் அண்மையில் தெல்தோட்டை பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 5 ஆம் திகதி வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து குடும்ப உறுப்பினர்கள் உட்பட அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். குடும்ப உறுப்பினர்களிடம் கடந்த 7 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகின. அதில் குடும்ப உறுப்பினர்கள் நால்வருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொற்றாளர்கள் பொல்கொல்ல மற்றும் பெனிதெனிய கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

கலஹா நிருபர் – ரம்யா

Related Articles

Latest Articles