தேசிய ஜுடோ சாம்பியன்ஷிப் போட்டியில் புசல்லாவை சரஸ்வதி மத்திய கல்லூரி மாணவி சாதனை

பாடசாலைகளுக்கிடையிலான 24 ஆவது தேசிய ஜுடோ சாம்பியன்ஷிப் – 2023 போட்டியில் புசல்லாவை, சரஸ்வதி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவியான பிரதீப் விஷாலினி மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

தரம் 9 இல் கல்வி பயிலும் குறித்த மாணவி 70 KG இற்கு குறைவான ஜுடோ போட்டி பிரிவிலேயே மூன்றாம் இடத்தைப்பிடித்து, பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

புசல்லாவை சரஸ்வதி மத்திய கல்லூரியானது கற்றல், கற்பித்தலைப்போன்று விளையாட்டு உள்ளிட்ட, தமிழ்தின போட்டி போன்ற இனைப்பாடவிதான செயற்பாடுகளிலும் சிறந்து விளங்கிவருகின்றது.

மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் ஜுடோ போட்டியென்பது அரிதாகவே காணப்படும் நிலையில், குறைந்தளவான விளையாட்டுத்துறை வளத்தை வைத்துக்கொண்டு, இப்படியான திறமைகளை வெளிப்படுத்துவதற்கு மாணவர்களுக்கு உற்சாகமளிக்கும், பயிற்சியளிக்கும் சரஸ்வதி மத்திய கல்லூரி போன்ற பாடசாலைகளை பாராட்டியே ஆக வேண்டும்.

ஜுடோ விளையாட்டு போட்டியில் அடுத்த கட்டம் நோக்கி செல்வதற்கு இந்த மாணவிக்கு ஜுடோவுக்கான சீருடை உள்ளிட்ட உதவிகள் தேவைப்படுகின்றன. அவற்றை வழங்குவதற்கு எவராவது முன்வந்தால் அது பயனுள்ளதாக இருக்கும்.

தொடர்புகளுக்கு – 081-2058888
( சரஸ்வதி மத்திய கல்லூரி அதிபர் திரு. G.லோகேஸ்வரன்)

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles