ஜே.வி.பி.தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அனுரகுமார திஸாநாயக்கவை களமிறக்குவதற்கு அக்கட்சி தீர்மானித்துள்ளதென அறியமுடிகின்றது.
கட்சி உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள வார இதழொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலை இவ்வருடத்துக்குள் நடத்துவதற்கு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளார் எனவும், அதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன எனவும் அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தேவையான சட்டதிருத்தங்களை மேற்கொள்வதற்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிரணிகளும் அறிவித்துள்ளன.
இவ்வாறானதொரு பின்புலத்தில் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.
இந்நிலையிலேயே தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக அநுரவை களமிறக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதென தெரியவருகின்றது.
