தேயிலை தோட்டத்தில் மான் வேட்டையில் ஈடுபட்ட மூவர் கைது!

தேயிலை தோட்டத்தில் சுற்றித்திரிந்த மானை கூரிய ஆயுதங்களை பயன்படுத்தி வேட்டையாடியதாக சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லொனாக் தேயிலை தோட்டத்தில் இறைச்சிக்காக விற்பனை செய்வதற்காக மானை வேட்டையாடியதாக ஹட்டன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தாம் சுற்றிவளைப்பை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் அதே தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், சந்தேகநபர்கள் மூவரையும் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles