தேரின் கலசம் கழன்று வீழ்ந்ததில் பெண் உயிரிழப்பு

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கிழக்கு குருந்தடி பிள்ளையார் ஆலயத்தின் தேர்த் திருவிழாவில் தேரில் இருந்த கலசம் கழன்று வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

முள்ளிவாய்க்கால் கிழக்கு குருந்தடி பிள்ளையார் ஆலயத்தின் தேர்த் திருவிழா இன்று நடைபெற்றபோது தேர் வீதி உலா வரும்போது தேரின் கலசம் மின் இணைப்பு வயரில் சிக்கி கழன்று வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு பெண் படுகாயமடைந்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 55 வயதான சங்கரப்பிள்ளை சசிகலா என்ற பெண்ணே இதன்போது உயிரிழந்துள்ளார்.

அவரின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

படுகாயமடைந்த பெண் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த உயிரிழப்பு சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவ இடத்துக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் சென்று பார்வையிட்டார்.

Related Articles

Latest Articles