தேர்தலுக்கான நகர்வுகளை முன்னெடுப்பதற்காக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விசேட குழுவொன்றை நியமித்துள்ளது என்று அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
தேசிய மட்டத்திலான தேர்தல்களில் சுதந்திரக் கட்சி எவ்வாறு செயற்பட வேண்டும், அதற்கு எவ்வாறு தயாராக வேண்டும் என்பன உள்ளிட்ட விடயங்களை இக்குழு தீர்மானிக்கும் எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் மைத்திரிபால சிறிசேன மேலும் கூறியவை வருமாறு ,
” அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார். சிலவேளை அதற்கு முன்னதாக பொதுத்தேர்தல் நடத்தப்படக்கூடும். எந்தவொரு தேர்தலாக இருந்தாலும் அதனை எதிர்கொள்வதற்கு தயாராக வேண்டும். அதற்காகவே இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இக்குழு கூடவுள்ளது. தேர்தலுக்கான தயார்படுத்தல்களை ஆரம்பித்துள்ளோம்.” –










