“தேர்தலை ஒத்திவைத்தால் மக்கள் புரட்சியின் 2ஆவது அலை உருவாகும்” – ஜே.வி.பி. எச்சரிக்கை

உள்ளாட்சிமன்ற தேர்தல் பிற்போடப்படுமானால் மக்கள் புரட்சியின் 2ஆவது அலை உருவாகும் – என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” தேர்தல் என்பது மக்களுக்கான உரிமை. அதனை எவரும் தட்டிபறிக்க முடியாது. அவ்வாறு முற்பட்டால் மக்கள் நிச்சயம் வீதியில் இறங்குவார்கள். அது மக்கள் போராட்டத்தின் 2ஆவது அலையாக அமையும்.

தேசிய மக்கள் சக்திக்கான வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எமது கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இதன்படி மாத்தறை மாநகரசபைக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தியும், கம்பஹா மாநகரசபைக்கு மஹிந்த ஜயசிங்கவும், அநுராதபுரம் நகரசபைக்கு முன்னாள் எம்.பி. வசந்த சமரசிங்கவும் போட்டியிடுகின்றனர்.” – என்றார்.

Related Articles

Latest Articles