ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கான ஆதரவு அதிகரித்துவருவதால் ஜனாதிபதி தேர்தல் சமரில் இருந்து தொழில் அதிபர் தம்மிக்க பெரேரா பின்வாங்கக்கூடும் என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க தான் எதிர்பார்த்துள்ளதாகவும், இதற்காக மொட்டு கட்சி முன்வைத்துள்ள 10 நிபந்தனைகளை நிறைவேற்றிவருவதாகவும் தம்மிக்க பெரேரா அண்மையில் அறிவித்திருந்தார். அத்துடன், தம்மிக்க பெரேராவின் பெயர் பரிசீலனையில் இருப்பதாக மொட்டு கட்சி செயலாளரும் அறிவித்திருந்தார்.
எனினும், தற்போது அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு பதவிகளை வகிக்கும் மொட்டு கட்சி உறுப்பினர்களும், மேலும் சில எம்.பிக்களும் ஜனாதிபதிரணிலுக்கு ஆதரவாக உள்ளனர்.
ரணிலுக்கு ஆதரவு வழங்காமல் மாற்று வேட்பாளர் ஒருவரை மொட்டு கட்சி களமிறக்கினால் அக்கட்சி மேலும் பிளவுபடும். இதனால் அக்கட்சியின் சார்பில் களமிறக்கும் வேட்பாளரால் வெற்றிபெற முடியாத சூழ்நிலை ஏற்படும்.
இது உள்ளிட்ட காரணிகளைக்கருத்திற்கொண்டே தம்மிக்க பெரேரா பின்வாங்கக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் சுட்டிக்காட்டப்படுகின்றது.
