நவம்பர் 14 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த கையோடு வெளிநாடு செல்வதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளார்.
ஓய்வு நிமித்தமும், சில சர்வதேச கருத்தரங்குகளில் பங்கேற்பதற்காகவுமே அவர் தனது பாரியார் சகிதம் வெளிநாடு செல்லவுள்ளார்.
தேர்தல் முடிந்ததும் தான் வெளிநாடு செல்லவுள்ளதை ரணில் விக்கிரமசிங்கவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதேவேளை, சில சர்வதேச அமைப்புகளும் தமது அமைப்பில் பதவியேற்குமாறு ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுத்துள்ளன என்று தெரியவருகின்றது.
