உத்தேச தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் பிரதமர் தலைமையில் இன்று நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்காதிருக்க தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் உயர்பீடக் கூட்டம் தலைவர் மனோ கணேசன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதன்போதே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியை பலப்படுத்துவதற்கான பங்களிப்பு வழங்குதல் உள்ளிட்ட விவகாரங்கள் பற்றியும் ஆராயப்பட்டுள்ளன.










