தேவாலயம்மீது தாக்குதல் நடத்தியவர் கைது!

யாழ்ப்பாணம் கோட்டைக்கு அண்மையில் உள்ள கிறிஸ்தவ தேவாலம்மீது இன்று அதிகாலை 3:30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் நிலையத்திற்கு அண்மையிலுள்ள குறித்த தேவாலயத்தின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணை நடத்தியதோடு குறித்த தாக்குதலை நடாத்திய கொட்டடி பகுதியைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் மது போதையில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலின் பிண்ணனி தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles