தொடரை கைப்பற்றுமா இலங்கை? இன்று பலப்பரீட்சை!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இந்தியாவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மும்பையில் நடந்த தொடக்க ஆட்டத்தில் 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவும், புனேயில் நடந்த 2-வது அட்டத்தில் 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையும் வெற்றி பெற்றன.

இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகின்றது.

Related Articles

Latest Articles