தொடர் போராட்டத்துக்கு கிடைத்தது வெற்றி – ஜோசப் ஸ்டாலின் விடுவிப்பு

முல்லைத்தீவு விமானப்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 16 பேர் தனிமைப்படுத்தலிலிருந்து இன்று விடுவிக்கப்பட்டனர்.

இதேவேளை, நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்ட முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து வௌியேறியுள்ளார்.

இலவசக் கல்வியை பாதுகாக்க வலியுறுத்தி ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றம் அவர்களுக்கு பிணை வழங்கியபோதும் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் இவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி 5 நாட்களாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஒன்லைன் கற்பித்ததில் இருந்து ஆசிரியர்கள் விலகினர்.

Related Articles

Latest Articles