சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் சுதத் சமரவீரவுக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி சுகாதார அமைச்சின் டெங்கு நோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், வைத்தியர் சமித கினிகே தொற்று நோய் பிரிவின் பதில் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கொவிட் – 19 தொடர்பான தகவல்களை வெளியிடுவது தொடர்பில் வைத்தியர் சுதத் சமரவீரவுக்கு எதிராக பல தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர், சமூகத்தொற்றை மூடிமறைக்கின்றார் என அரச வைத்திய அதிகாரி சங்கம்கூட சாடியிருந்தது.
கொரோனா மரணங்கள் தொடர்பில் வெளியிடப்பட்டிருந்த தரவுகள் சம்பந்தமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் நேற்று அதிருப்தியை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அவருக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.










