தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த யுவதி ரயில் மோதி பலி

அதிவேக ரயிலில் மோதி யுவதி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

அளுத்கமவிலிருந்து பொல்கஹவெல நோக்கிப் பயணித்த அதிவேக ரயிலில் மோதியே மேற்படி யுவதி சாவடைந்துள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்த விபத்தில் கல்லனமுல்ல, பயாகல பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார்.

களுத்துறை வேலபுர வித்தியாலயத்துக்குப் பின்புறம் உள்ள ரயில் பாதையில் மேற்படி யுவதி கைத்தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தபோது ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles