செப்பு உலோகத்திற்காக, நாடளாவிய ரீதியில் தொலைபேசி இணைப்பு கம்பிகளை திருடிவந்த குழுவைச் சேர்ந்த எழுவரை கலஹா பொலிஸார் கைது செய்துள்ளனர்
‘டெலிகொம்’ நிறுவன ஊழியர்கள் அணியும் ஆடைகளுடன் நிறுவனத்தின் இலட்சனை பொருத்திய இரு ஆட்டோக்களில் வந்த சந்தேக நபர்கள், கலஹா நில்லம்பையிலிருந்து அரிசி தோட்டம் வரை உள்ள தொலைபேசி இணைப்பு கம்பிகளை வெட்டிய சந்தர்ப்பத்திலேயே சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் 2 ஆம் திகதி, இரவு 7 மணிவரை குறித்த நபர்கள் கம்பிகளை அகற்றுவதனை அவதானித்த பொலிஸார் சந்தேகம் கொண்டு தேடிப்பார்த்த பொழுது வெட்டிய கம்பிகளில் ஒரு பகுதி ஆட்டோக்களிலும், ஏனையவை வடிகான்களுக்குள்ளிருந்தும் மீட்கப்பட்டதோடு அவர்களிடமிருந்து ஆட்டோ, கம்பி வெட்டும் உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையிலிருந்து நுவரெலியா , இறம்பொடை, கடுகண்ணாவைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர்களினால் நாடளாவிய ரீதியில் தொலைபேசி மின்கம்பிகள் திருடப்பட்டமை தெரியவந்துள்ளது
குறித்த சந்தேக நபர்களை நீதி மன்றில் பொலிஸார் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கம்பளை நிருபர்
