தொழிலாளர்களுக்காக எல்லா வழிகளிலும் போராடுவோம்! -ஜீவன்

மலையக மக்களுக்காகவும், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்காகவும் அரசியல், தொழிற்சங்கம் மற்றும் சட்ட ரீதியாக காங்கிரஸ் தொடர்ந்தும் போராடும் – என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்க வேண்டும் என்ற சம்பள நிர்ணய சபையின் தீர்மானத்துக்கு எதிராக, முதலாளிமார் சம்மேளனத்தால் தாக்கல்செய்யப்பட்ட மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (09) தள்ளுபடி செய்துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜீவன் தொண்டமான்,

” தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு காங்கிரஸ் போராடிது. அதில் வெற்றி கண்டது. எனினும், நிர்வாக தரப்பு நீதிமன்றம் சென்றது. சம்பள உயர்வு வெற்றியை தக்க வைத்துக்கொள்ள சட்ட ரீதியாகவும் காங்கிரஸ் பாடுபட்டது. இன்று அதில் வெற்றி கிடைத்துள்ளது.

தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பது குறித்து கவனம் செலுத்தியுள்ளோம். எமது மக்களுக்காக எல்லா வழிகளிலும் போராடுவோம்.” – என்று குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles