சுய தொழில் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு சந்தை வாய்பை ஏற்படுத்தும் நோக்கில் புதிய திட்டமொன்றை பிரஜா சக்தி செயல் திட்டத்தின் பணிப்பாளர் பாரத் அருள் சாமி உருவாக்கியுள்ளார்.
உள்நட்டு வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் மற்றும் முதலீட்டாளர்களைக் கவரும் வகையில் இம்முறை இந்தத் திட்டத்தை பாரத் அருள்சாமி வடிவமைத்துள்ளார்.
இதன்முதற்கட்டமாக நுவரெலியா பருவகால கொள்வனவு தொகுதியில் பிரஜா ஷொப்பிங் விற்பனை கூடமொன்று திறந்துவைக்கப்பட்டது.
இந்த விற்பனைக் கூடத்தில் சுயதொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் உற்பத்திகள் விறப்னைக்கு வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பிரஜா சக்தி செயல்திட்டத்தின் மூலம் சுயதொழிலில் ஈடுபடுவதற்கு வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றனர்.
எனினும், இவர்களுக்கான சந்தை வாய்ப்பைப் பெறுவதில் பெரும் சிரமங்கள் இருப்பதால் சுயதொழிலில் ஈடுபடுவோர் தொடர்ந்தும் வாழ்க்கைப் போராட்டத்தை எதிர்கொண்டுள்ளனர்.
இதற்குத் தீர்வாக பிரஜா சக்தியின் செயல்திட்டப் பணிப்பாளர் பாரத அருள்சாமி புதிய சந்தைவாய்ப்பை ஏற்படுத்துவதற்கான திட்டமொன்றையும் வகுத்துள்ளார்.
சுயதொழிலில் ஈடுபடுவோருக்கு நேரடியாக சந்தைவாய்ப்பை ஏற்படுத்தி, நுகர்வோருக்கு அதனை குறைந்தவிலையில் பெற்றுக்கொள்வதற்கான வழிகளிலும் இதன்மூலம் வகுக்கப்பட்டுள்ளது.
நம்வர் உற்பத்திகளை ஊக்குவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள பிரஜா சக்தி திட்டப் பணிப்பாளர் பாரத் அருள்சாமி, மக்கள் நம்நாட்டு உற்பத்திகளை பயன்படுத்தி, நம்மவர்களை வலுப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அத்துடன், நுவரெலியா பருவகால நிகழ்வுகளில் கலந்துகொள்ள வருவோர் எம்மவர் விற்பனை கூடத்திற்கு வந்துசெல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த விற்பனைக் கூடத்தை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேற்று திறந்துவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.