தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் குறித்து சபையில் வெளியான தகவல்….

” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு விரைவில் சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்,

” நாட்டில் பொருட்கள், சேவைகளின் விலைகள் உச்சம் தொட்டுள்ளன. வாழ்க்கை சுமை மும்மடங்காக அதிகரித்துள்ளது. பெருந்தோட்ட மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளம் வழங்குமாறு ஜனாதிபதி அண்மையில் கம்பனிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தார். எனினும், இன்னும் தீர்வு இல்லை. எனவே, விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” – என வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, ” தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுக்க அரச தலைவர் ஒருவர் நேரடியாக தலையிட்டுள்ளார். நேற்றைய தினமும் சம்பளம் குறித்து பேச்சு நடைபெற்றது. விரைவில் சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றார்.

Related Articles

Latest Articles