மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குமாறு இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தொழில் அமைச்சருக்கும், தொழிற்சங்க பிரதிநிதிகளுக்குமிடையிலான கலந்துரையாடலொன்று இன்று நடைபெற்றது. இதன்போதே மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, தனியார்துறை ஊழியர்களுக்கும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குவது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.










