மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக 2 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக தற்போது ஆயிரம் ரூபா வழங்கப்படுகின்றது. இது போதாது. அந்த சம்பளம் 2 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும்.
அதேவேளை, பெருந்தோட்ட மக்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” – எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.










