‘தோட்டத் தொழிலாளர்கள் உரிய வேதனம் இன்றி துன்பத்தில் சிக்கி நிர்க்கதி’

சுதந்திர சதுக்கத்தில் சுதந்திரத்தை தேடுகிறேன், அதனை காணவில்லை – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை வலியுறுத்தியும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து சுதந்திர சதுக்கத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மனோ கணேசன் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” சுதந்திர சதுக்கத்தில் இன்று சுதந்திரத்தை தேட வேண்டியுள்ளது. ஒரே நாடு, ஒரே சட்டம் என்று சொன்னீர்களே என இவர்களுக்கு நாம் ஞாபகப்படுத்த வேண் உள்ளது. ஏனெனில், தங்கள் துன்பம், துயரம் காரணமாக மக்கள் தெருக்களுக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.

அவர்களை இந்த அரசின் பொலிஸ் படை கைது செய்து, சுய தனிமைக்கு அனுப்புகிறது. ஆனால், நேற்று இந்நாட்டுக்கு அமெரிக்காவில் இருந்து, அலாவுதீனின் அற்புத விளக்குடன் வந்த பெசில் ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து, பல இடங்களில் பலர் கூடி நின்று பட்டாசு வெடித்தார்கள். அவர்கள் மீது ஏன் இந்த கொரோனா சட்டம் பாயவில்லை?

அன்று, ஒரே நாடு, ஒரே சட்டம் என்று நீங்கள்தானே சொன்னீர்கள். இன்று, பொது மக்களுக்கு ஒரு சட்டம், ராஜபக்சர்களுக்கு ஒரு சட்டமா?

தோட்ட தொழிலாளர்கள் வேதனம் இல்லாமல், துன்பத்தில் சிக்கி, நிர்க்கதி நிலையை நோக்கி தள்ளப்பட்டுள்ளனர். இரசாயன கப்பல் அழிவினால், மீனவர்கள் தொழில் இழந்து தவிக்கின்றனர். உரம் இல்லாமல், விவசாயிகள், விளைச்சல் இல்லாமல், வருமானம் இல்லாமல் துன்புறுகின்றனர்.

இதனாலேயே நாடு முழுக்க ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. மக்கள் தங்கள் துன்பங்களை நாட்டுக்கு தெரிவிக்க வேறு வழி இல்லை. ஆனால், அரசாங்கம் பொலிசை போட்டு, மக்களை கைது செய்கிறது. கொரோனாவை காட்டி, தனிமைப்படுத்துகிறது.

அதேவேளை பெசில் ராஜபக்ச பலரை கூட்டி நிறுத்தி பதவி பிரமாணம் செய்கிறார். அவரை வாழ்த்தி அவரது கட்சி நபர்கள் கூடி நின்று பட்டாசு வெடிக்கிறார்கள். அவர்களை பொலிஸ் கண்டுக்கொள்வது இல்லை. இது என்ன நியாயம்?

இது சுதந்திர சதுக்கம். இங்கே இன்று சுதந்திரத்தை தேட வேண்டியுள்ளது. நீங்கள்தானே ஒரு நாடு ஒரு சட்டம் என்று சொன்னீர்கள். இன்று மக்களுக்கு ஒரு சட்டம். அரசனுக்கு இன்னொரு சட்டமா?

இலங்கை பொலிஸ் மீது எனக்கு அன்பு இருக்கிறது. ஆனால், அந்த பொலிஸ், அரசியல்வாதிகளின் பேச்சை கேட்டு ஆடக்கூடாது. சட்டம் உருவாக்குவது நாடாளுமன்றத்தில் ஆகும். நீங்கள் புது புது சட்டங்களை உருவாக்கி மக்களை அடிமைப்படுத்த முயல வேண்டாம். மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுங்கள். ஆர்ப்பாட்டங்கள் நின்று போகும்.

இன்று இந்த நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை ஒன்று சேர்த்து, நாம் சிங்கள, தமிழ், முஸ்லிம், பெளத்த, இந்து, இஸ்லாம், கத்தோலிக்கம் என்ற இலங்கை நாட்டை உருவாக்குவோம்.” – என்றார்.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles