மஸ்கெலியா, ஆர்.பி.கே.பிளான்டேசனுக்கு உரித்தான சாமிமலை மல்லியப்பூ தோட்ட தொழிலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பள நிர்ணய சபை மூலம் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் தமக்கு சம்பளம் வழங்கப்படவதில்லை. மாறாக பறிக்கும் பச்சை கொழுந்துக்கமையவே சம்பளம் வழங்கப்படுகின்றது என தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
இதன்மூலம் ஆயிரம் ரூபா என்ற அடிப்படை சம்பளம் பெறும் உரிமை மீறப்படுகின்றது, குறைந்தளவு சம்பளமே வழங்கப்படுகின்றது, இதனை ஏற்க முடியாது எனவும் தொழிலாளர்கள் கூறினர்.
நாட்டில் தற்போது பொருட்களின் விலைகள் எகிறியுள்ளன. வாழ்க்கைச்சுமை உச்சம் தொட்டுள்ளது. எனவே, குறைந்தளவு சம்பளத்தை வைத்து எவ்வாறு வாழ்வது எனவும் தொழிலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்










