‘தோட்ட குடியிருப்பில் புதையல் தோண்டிய நால்வருக்கு மறியல்’

ஹாலி-எல பகுதியின் நேப்பியர் கீழ்ப்பிரிவு பெருந்தோட்டத்தின் குடியிறுப்பொன்றில் புதையல் தோண்டிய நால்வர் கைது செய்யப்பட்டு, நீதிபதி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டதும், நீதிபதி அவர்களை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.

பதுளை மஜிஸ்ரேட் நீதிபதி சமிந்த கருணாதாச முன்னிலையில் 12-11-2020  மேற்படி புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட நால்வரும் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி அந் நால்வரையும், எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

நேப்பியர் கீழ்ப்பிரிவு பெருந்தோட்ட குடியிறுப்பொன்றில், மலசலக்கூட குழியொன்றை தோண்டுவதாகக் கூறியே, மேற்படிபுதையல் தோண்டப்பட்டமை ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. 17 அடி ஆழத்தில் மேற்படி குழி தோண்டப்பட்டுக் கொண்டிருந்த நிலையில்,பொலிசார் சுற்றிவலைத்து,புதையல் தோண்டிய நால்வரும் கைதுசெய்யப்பட்டிருந்தனர். கைதுசெய்யப்பட்டநால்வரில் மந்திரவாதி ஒருவரும் உள்ளடங்கியுள்ளார்.

Related Articles

Latest Articles