” தேர்தலை நடத்துவதற்கு தற்போதைய அரசாங்கம் அஞ்சுகின்றது. எனவே, தேர்தலை ஒத்திவைப்பதற்கான நாடகமாகவே தேர்தல் முறைம மாற்றம் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெறுகின்றது.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
” பாராளுமன்ற தேர்தல் முறைமையை மாற்றியமைப்பதற்கான முயற்சியை அரசு முன்னெடுத்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் இப்படியானதொரு முயற்சி இடம்பெறுவதை நாம் எதிர்க்கின்றோம். அதற்கு ஆதரவு வழங்கபோவதில்லை.
உண்மையான நோக்கில் அரசாங்கம் இதனை செய்யவில்லை. மாறாக தேர்தலை ஒத்திவைக்கும் நாடாகமே இது. ஏனெனில் தேர்தல் நடத்தப்பட்டால் அதில் படுதோல்வி ஏற்படும் என்பது ஆட்சியாளர்களுக்கு தெரியும்.” எனவும் திகாம்பரம் சுட்டிக்காட்டினார் .










