கணவனை மனைவி கத்தியால் தாக்கி கொலை செய்துள்ள சம்பவமொன்று மஹியங்கனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
42 வயதான முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபர் சம்பவ தினத்தன்று இரவில் மது போதையில் வீட்டுக்குவந்து, மனைவியை தாக்கி நஞ்சை கொடுத்து அதனை பருகுமாறு மனைவி மற்றும் பிள்ளைகளை வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் மனைவி தனது பிள்ளைகளை காப்பாற்றுவதற்காக கத்தியால் கணவனை தாக்கியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மனைவியை தாக்கிய குற்றச்சாட்டில் விளக்கமறையில் வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.










