நடிகர் தனுஷின் மகனா இது

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகராக விளங்குபவர்.இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இவர் நடிப்பில் உருவாகி வரும் திருச்சிற்றம்பலம் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.

அதே போல் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் மற்றும் ஹாலிவுட் திரைப்படமான The Gray Man படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடந்து வருகிறது.நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவிற்கு இரு மகன்கள் என்பதை நாம் அறிவோம்.

இந்நிலையில் தங்களின் மூத்த மகனின் சமீபத்திய புகைப்படத்தை ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், தனுஷின் மகனா இது..! நன்றாக வளர்ந்து விட்டாரே என கூறி வருகின்றனர்.

 

 

Related Articles

Latest Articles