நமுனுகலையில் இருவரை பலியெடுத்த ‘ரதம்’ – உழவு இயந்திர சாரதி கைது!

பதுளை, நமுனுகலை பகுதியில் மின் கம்பியில் ரதம் மோதி இடம்பெற்ற அனர்த்தத்தில் இருவர் பலியான சம்பவம் தொடர்பில் ரதத்தை செலுத்திய உழவு இயந்திர சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்று பதுளை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டவேளை, அவரை எதிர்வரும் 31 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பசறை, நமுனுகுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூட்டாவத்தை கதிர்வேலாயுத சுவாமி ஆலய ரதம் நேற்று பவனி வந்துகொண்டிருக்கையில், உழவு இயந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த ரதம் மின் கம்பியுடன் மோதியதில் இருவர் பலியாகினர். மூவர் பாதிக்கப்பட்டனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூவரும் சிகிச்சையின் பின்னர் இன்று வீடு திரும்பியுள்ளனர்.

ராமு தனராஜ்

Related Articles

Latest Articles