நம்பிக்கையில்லாப் பிரேரணையில் முற்போக்கு கூட்டணி எம்.பிக்கள் கையொப்பம்!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் எம்.பிக்களும் கையொப்பமிட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பம் திரட்டும் நடவடிக்கை இன்று ஆரம்பமான நிலையில், பிரேரணையில் முதல் கையொப்பத்தை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கிவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, குமார வெல்கம ஆகியோரும் பிரேரணையில் கையொப்பம் இட்டுள்ளனர்.

கையொப்பம் திரட்டும் நடவடிக்கை முடிவடைந்த பின்னர் நம்பிக்கையில்லாப் பிரேரணை அடுத்தவாரம் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது.

Related Articles

Latest Articles