சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்போம் – என்று சூளுரைத்துள்ளார் ஆளுங்கூட்டணியின் பிரதான பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
” கோட்டாபய ராஜபக்ச ஆட்சிகாலத்தில் , போராட்டம் இடம்பெற்ற காலப்பகுதியில் நாட்டில் எல்லா இடங்களிலும் எரிவாயு அடுப்பு வெடிக்கின்றது என்ற செய்தி உருவாக்கப்பட்டது. ஊடகங்களிலும் அந்த செய்திகள் வெளியாகின. ஆனால் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகிய பின்னர் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் இல்லாமல்போகின.
அதேபோல சுகாதாரதுறையில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு கெஹலிய ரம்புக்வெல்ல பொறுப்புகூறவேண்டும் என விஞ்ஞானப்பூர்வமாக எதுவும் நிரூபனமாகவில்லை. அன்றுபோல் இன்றும் சூழ்ச்சிகள் இடம்பெறக்கூடும்.
எனவே, சுகாதார அமைச்சர் பக்கம் நாம் இருப்போம். அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்.” – என்றார்.
