அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆளுங்கட்சி எம்.பிக்கள் அனைவரும் எதிராகவே வாக்களிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சி நாடாளுமன்றக்குழுக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்றிரவு நடைபெற்றது. இதன்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது ஜுலை 20 ஆம் திகதி மாலை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.