நல்லாட்சியின்போது மௌனம் காத்த வேலுகுமார் இன்று முதலைக்கண்ணீர் – கணபதி கனகராஜ் குற்றச்சாட்டு

நல்லாட்சி காலத்தில் ஆசிரியர் நியமனங்களோ அல்லது உதவி ஆசிரியரகளை நிரந்தரமாக்குவது தொடர்பாகவோ ஆசியர் சேவைக்கு உள்ளவாங்குவது தொடர்பாகவோ எதுவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாதவர்கள் இன்று முதலை கண்ணீர் வடிக்கிறார்கள் என முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உப தலைவர்களில் ஒருவருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்து தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பொன்று நேற்று முன்தினம் (28) ஹற்றனில் நடைபெற்றது.

அதில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நியமனங்கள் வழங்குவது, தாமதப்படுவது குறித்து நாங்கள் கவலையடைகின்ற நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் நியமனத்தை தள்ளிவைத்து அதில் நாங்கள் அரசியல் செய்ய முற்படுவதாக தெரிவித்திருக்கிறார். நியமனங்களை வழங்குவதன் மூலம் தான் அரசியல் செய்ய முடியுமே தவிர நியமனங்களை தடுத்து நிறுத்துவதன் மூலம் எவ்வாறு அரசியல் லாபம் தேடமுடியும் என்று வேலுகுமாருக்கு தெரியாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது.

முன்னாள் அமைச்சர் இராதாகிருஸ்ணன் கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்த போது இந்த நியமனங்களை வழங்குவதற்கான சந்தர்ப்பம் இருந்தும் கூட அதை வழங்காமல் விட்டுவிட்டு தற்போது நாங்கள் நியமனங்களை வழங்குவதற்கு எடுக்கின்ற முயற்சியை விமர்சிப்பது வேதனையாக இருக்கின்றது. நியமனங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை எங்களது அழுத்தத்தினால் மத்திய மாகாண கல்வி அதிகாரிகள் செய்திருந்த போதும் தற்போது அவர்கள் நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷவின் அனுமதியை பெறுவதற்கு காத்திருப்பதாக எமக்கு தெரிவிக்கிறார்கள் எனவும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles