வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
அதனை முன்னிட்டு ஆலய வெளிவீதியைச் சற்றி சிவப்பு வெள்ளைத் துணிகள் கட்டப்பட்டு, திருவிழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் மகோற்சவ திருவிழாக்கள் நடைபெறவுள்ளன.
மகோற்சவ திருவிழாக்களின் 10ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா எதிர்வரும் 7ஆம் திகதியும், 22ஆம் திருவிழாவான மாம்பழத் திருவிழா எதிர்வரும் ஓகஸ்ட் 19ஆம் திகதியும், 24ஆம் திருவிழாவான தேர்த் திருவிழா ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி காலையும், மறுநாள் 22ஆம் திகதி காலை தீர்த்தத் திருவிழாவும் நடைபெற்று, மாலை கொடியிறக்கம் நிகழ்த்தப்படுவதோடு, மகோற்சவம் நிறைவு பெறும்.