நள்ளிரவில் வீடு புகுந்து குடும்பத்தலைவரை வாள் மற்றும் கத்தியால் வெட்டி படுகாயப்படுத்திவிட்டு 6 பவுண் தாலிக்கொடியை கொள்ளையிட்ட கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
கோண்டாவில் செபஸ்தியான் வீதியில் உள்ள வீடொன்றில் சனிக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது.சம்பவம் தொடர்பில் பொலிஸார் தெரிவித்ததாவது;
வீடு புகுந்த கும்பல் வாள் மற்றும் கத்தியால் குடும்பத்தலைவரை வெட்டி படுகாயப்படுத்திவிட்டு 6 தங்கப் பவுண் தாலிக்கொடியை கொள்ளையிட்டுத் தப்பித்தது.
கோப்பாய் வைத்தியசாலையில் கடமையாற்றுபவரின் வீட்டிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றது. கொள்ளைக் கும்பலின் வாள்வெட்டுக்கு இலக்காகியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.










