மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து இன்று நள்ளிரவு முதல் முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது – என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
சுகாதாரம், துறைமுகம் உட்பட அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமே மாகாணங்களுக்கிடையில் பயணிக்க அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.
மாகாணங்களுக்கிடையிலான பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், கொவிட் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் பெறாதவர்கள் செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு பிறகு பொது வெளியில் பயணிக்க அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.










