எதிர்வரும் நவம்பர் மாதம் இறுதியில் அல்லது டிசம்பர் முதல்வாரத்தில் பொதுத்தேர்தல் நடத்தப்படலாம் என தெரியவருகின்றது.
அத்துடன், இம்மாதத்துக்குள் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, தேர்தலுக்குரிய அழைப்பு விடுக்கப்படவுள்ளது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது முதல் தேர்தல் நடக்கும்வரை இடைக்கால அரசு செயற்படும், அதன் பிரதமராக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய பதவி வகிக்கவுள்ளார்.
தான் ஆட்சிக்கு வந்தால் கூடியவிரைவில் நாடாளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
