நவலோக்க மருத்துவமனை இலங்கையின் முதலாவது ‘Drive-thru’ இரசாயன கூட மற்றும் மருத்துவ பரிசோதனை சேவைகளை ஆரம்பிக்கிறது

கொவிட் தொற்றுநோயினால் தமது நோயாளர்கள் மற்றும் ஊழியர்களை பாதுகாப்பதற்காக பாரிய அர்ப்பணிப்புடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தனியார் வைத்தியசாலை துறையின் முன்னோடிகளான நவலோக்க மருத்துவமனை குழுமம் இலங்கையின் முதலாவது ‘Drive-thru’ இரசாயன கூடம் மற்றும் மருத்துவ பரிசோதனை சேவைகளை ஆரம்பித்துள்ளது.

அதி நவீன உபகரணங்களுடன் கூடிய இந்த ‘drive-thru express இரசாயன கூடங்கள் கொழும்பு மற்றும் நீர்கொழும்பு நவலோக்க மருத்துவமனை சூழலில் அமைக்கப்பட்டுள்ளன.

நவலோக்க இரசாயனக் கூடங்கள் குழுமத்திற்கு சொந்தமான இந்த ‘Drive-thru’ இரசாயன கூடங்கள் மற்றும் மருத்துவ சேவை மத்திய நிலையம், நவலோக்க இரசாயனக் கூட வலைப்பின்னலுக்கு சொந்தமான சிறிய இரசாயனக் கூடங்களைப் போன்றே சரியாகவும், பாதுகாப்பாகவும் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இலகுவான விதத்தில் உச்ச அளவில் தமது சேவைகளை நடத்திச் செல்கின்றது.

இலங்கையில் சுகாதார சேவைத் துறையில் புதிய அனுபவத்தை வழங்கியுள்ள நவலோக்க இரசாயனக் கூடங்கள் நவலோக்க மருத்துவமனைக் குழுமத்தின் தலைவர் கலாநிதி தர்மதாஸ மற்றும் உப தலைவர் ஹர்ஷனி தர்மதாஸ ஆகியோரின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இதிலுள்ள மற்றுமொரு சிறப்பம்சம் என்னவென்றால், வாகனத்தில் இருந்தவாரே வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்ள முடிவதுடன், இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகளை வாகனத்திலிருந்தே வழங்கக்கூடிய வசதிகள் இதில் உள்ளதுடன் இரசாயனக் கூட பரிசோதனைகள் 6 நிமிடங்களுக்கும் குறைந்த மிகக் குறுகிய காலத்திற்குள் மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

நோயாளர்களின் இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகள் NawalokaCare கையடக்க தொலைபேசி செயலியின் மூலம் Drive-thru கருமபீடத்தில் பெற்றுக் கொள்ள முடியும். மேலும் 600க்கும் அதிகமான நிபுணத்துவம் கொண்ட வைத்திய பரிசோதனை சேவைகள், CT அல்லது MRI பரிசோதனை அறிக்கைகளும் இதன்போது பெற்றுக் கொள்ள முடியும்.

“அண்மையில் கொவிட் தொற்றுநோயினால் பாதிக்கப்பட்டோர் துரிதமாக அதிகரித்ததை காணக்கூடியதாக இருந்ததுடன் அன்றாட வாழ்க்கையில் தனிபர்களின் பாதுகாப்பு குறித்து அதிகமாக நாம் கவனம் செலுத்த வேண்டியிருந்தது.

இலங்கையில் முதலாவது முறையாக வாகனத்திலிருந்து தமது இரசாயன கூட சேவைகள் மற்றும் மருத்துவ சேவைகளை பெற்றுக் கொள்வதற்கு ஏற்ற விதத்தில் ‘Drive-thru’ இரசாயனக் கூட சேவைகளின் மூலம் பாதுகாப்பாகவும் மற்றும் துரிதமாகவும் வாடிக்கையாளர்களுக்கு சுகாதார சேவைகளுக்கான தேவைகளை வழங்குவதற்கு எம்மால் முடிந்துள்ளது.

மேலே குறிப்பிடப்பட்ட விதமாக இரசாயனக் கூடத்திற்கு மாதிரிகளை பெற்றுக் கொள்கையில் நோயாளருக்கு 30 நிமிட காலத்தில் அந்த சூழலில் இருக்கையில் இந்த புதிய எண்ணக்கருவிற்கு அமைய 6 நிமிடம் போன்ற மிகவும் குறுகிய காலத்திற்குள் மேற்கொள்ளக் கூயதாக இருப்பது அவர்களது பாதுகாப்பு மற்றும் வசதிகளுக்கு ஏற்ப பெற்றுக் கொடுக்கக் கூடிய விசேட சேவையாக கருத முடியும்.”

என நவலோக்க மருத்துவமனைக் குழுமத்தின் உப தலைவர் ஹர்ஷனி தர்மதாஸ தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles